உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-11-11 09:22 GMT   |   Update On 2022-11-11 09:22 GMT
  • கொலை வழக்கில் சுடலை என்ற சுடலை மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
  • 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி:

சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (வயது27) என்பவர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலை என்ற சுடலை மகாலிங்கம் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தாளமுத்துநகர் பூபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த அழகுமுத்து, முருகன் மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சாலையப்பன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ராதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (34) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்த இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாரைக்கிணறு இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர்.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 233 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News