சின்னமனூர் அருகே வெறிநாய் கடித்து சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்
- பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே கன்னியம்பட்டி நடுத்தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து சாலையில் ஆவேசமாக ஓடியது.
அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ரியாசினி மற்றும் வெள்ளத்தாய் என்ற 70 வயது மூதாட்டி உள்பட 4 பேரை கடித்து குதறியது. இதனைதொடர்ந்து அவர்கள் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரியாசினிக்கு காயம் பெரியஅளவில் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ஆட்டோவில் பயணிக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.