சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 5 பேர் கைது
- கள்ளசாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முழு வதும் உள்ள போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த மணி மகன் ராமச்ச ந்திரன் (வயது 38) என்பவ ரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கீதா (34), ராஜா இவரது மனைவி சத்யா( 30 )ஆகியோரிடம் இருந்து 40 லிட்டர் சாராயமும், பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பால கிருஷ்ணன் வயது 34 என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும் நாககு ப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை (வயது 34) என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்து 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.