குறிஞ்சிப்பாடியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
- 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்ன தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ெரயில் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசா ரணை மேற்கொண்டனர். அதில் வந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனை அடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் குறிஞ்சிப்பாடி சுப்புராயர் கோவில் பகுதியைச் சார்ந்த ராஜா, சக்கரவர்த்தி மற்றும் வாசுதேவன் என தெரிய வந்தது.
இதையடுத்து தொடர்ந்து நடந்த சோதனையில் அலமேலு நகர் பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டிற்கு அருகே சந்தேகப்ப டும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ய போலீசார் சென்றனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். மற்ற 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாட்டை வீதியை சார்ந்த பாலமுருகன், அம்பேத்கர் நகரைச் ேசர்ந்த ஆல்பர்ட் எட்வின் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்ற ப்பட்டன. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.