உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் செயினை பறித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Published On 2023-04-01 09:26 GMT   |   Update On 2023-04-01 09:26 GMT
  • மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
  • சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் அருகே உள்ள அ.குன்னத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

இதை பார்த்த அந்த அவர், பீர் பாட்டிலை உடைத்து அருகே வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி அருகில் இருந்த கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மூதாட்டி சரஸ்வதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது நகையை பறித்து சென்றது அ.குன்னத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், சுரேசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுரேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News