சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவிலில் 56-ம் ஆண்டு திருவிழா
- திருவிழாவையொட்டி பால்குட வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான முப்பிடாதி அம்மன் கோவிலில் 56-ம் ஆண்டு பாலாபிஷேகம், சந்தன அபிஷேக விழா சங்கரன்கோவில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு பால்குட வீதி உலா நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இரவு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
நிகழ்ச்சியில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் செய்யது அலி, துணை செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன் மற்றும் கண்ணையா, கருப்பசாமி, சுப்பிரமணியன், வேல்சாமி, முருகன், மூர்த்தி, முத்துக்குமார், நாராயணன், முத்துசாமி, கருப்பசாமி, முப்பிடாதி, பாலசுப்ரமணியன், துரைராஜ், ஜெகநாதன், குருசாமி, ரவிச்சந்திரன், பரமசிவம், இசக்கி ராஜன், சின்னபாண்டியன், நடராஜன் மற்றும் தினசரி நாளங்காடி வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.