உள்ளூர் செய்திகள்

மேல்பாதி கிராமத்தில், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீதர்மராஜா பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு, முக்கிய வீதிகளில் பச்சைகீற்று (தென்னை ஓலை) பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராம கோவிலில் 60 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-07-29 07:36 GMT   |   Update On 2022-07-29 07:38 GMT
  • விழுப்புரம் அருகே மேல்பாதி கிராம கோவிலில் 60 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில், வருகிற 2-ந் தேதி, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழா நடைபெறுகிறது. விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில், பழமைவாய்ந்த ஸ்ரீதர்ம ராஜா ஸ்ரீதிரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்துடன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, கடந்த 23-ந் தேதி துவங்கி, அரிசிகவுண்டன் பாளையம் நாகரத்தினம், பாரத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தொடர்ந்து வரும் 1-ந் தேதி காலை அக்னி பூஜை, கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி, மாலை கும்ப பூஜை, காப்பு கட்டுதல் நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 6 மணிக்கு தர்மராஜா பட்டாபிஷேக பூஜையும், 7 மணிக்கு பட்டாபிஷேக மங்கள ஆரத்தி தச தானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையொட்டி, கிராமத் தில் வீதியுலா நடைபெறும் முக்கிய வீதிகள் தோறும் பச்சைகீற்று (தென்னை ஓலை) பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அலங்கரிக் கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலம், கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்கால் குதிரை, செண்டி மேளம், உறுமி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல், விழா குழுவினர்கள் சீதாராமன், சுப்பிரமணியன், சக்திவேல், தனபால், ராமகிருஷ்ணன், இளையரசன், தயாநிதி கோவில் நிர்வாகத்தினர், தாளாளர் மகாதேவன் அம்மன் கருணாநிதி பிரஸ் குமரன் அரவிந்த் செராமிக்ஸ் சரவணன் கிராம இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News