தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை எழுச்சி மாநாட்டிற்கு 700 வாகனங்களில் செல்ல ஏற்பாடு- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தகவல்
- ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
- மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.
செங்கோட்டை:
மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்று பேசினார். தொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
700 வாகனங்கள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் குடும்பத்துடன் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. எனவே அன்று அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூருக்கும் ஒதுக்கப் பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வர வேண்டும். வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
குடிநீர் வசதி
ஒவ்வொரு வாகனத் திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப் பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருசேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து மீண்டும் ஊருக்கு பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். மாநாட்டை வெற்றி அடைய செய்து அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே. முருகன், பரமேஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.