நாகையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கள்ளசாரயம் பறிமுதல்
- குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
- விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த மூன்று நாட்களில் (14, 15, 16.05.2023) ஆகிய 3 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் நடத்திய தீவிர மதுவிலக்கு வேட்டையில் 96 கள்ள சாராய வழக்குகள் பதியப்பட்டும், அதில் 92 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,31,950 மதிப்பு உடைய விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581)மூலம் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனையை குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.