உள்ளூர் செய்திகள்

விதிமீறி அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-09-21 09:18 GMT   |   Update On 2022-09-21 09:18 GMT
  • சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 72 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் பெற்று இயங்குகிறதா? என்றும் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் கடந்த மாதத்தில் விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கும், 72 ஆட்டோக்களுக்கும், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், அரசு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 6 சாலை விதிகளை மீறிய 266 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News