தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்ற மது விற்ற 9பேர் கைது270 மதுபாட்டில்கள் பறிமுதல்
- தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்ற மது விற்ற 9பேர் கைது செய்தனர்.
- மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மது விற்றவர்களிடம் இருந்து 270 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கம்பைநல்லூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் மற்றும் போலீசார் மொரப்பூர் சாலையில் உள்ள ஜெயம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகம்படும்படி ஒருவர் கையில் சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் போலீசாரையும் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
உடனே போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே நவலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் (வயது52) என்பவர் அனுதியின்றி சாக்கு மூட்டையில் 30 மதுபாட்டில்களை விற்ப னைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. யஉடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அரூர் போலீஸ் சப்-இன்ஸ்–பெக்டர் நாகராஜூக்கு பேரேரி கிராமத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, பேரேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (32) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்ததும், மேலும் அதிக போதை வருவதற்காக ஊமத்தங்காய் சாறை பிழிந்து கலந்து இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியில் உள்ள வினோ பாஜி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (45) என்பவர் மதுபாட்டில்கள் விற்றதும், அதில் ஊமத்தங்காயை சாறு பிழிந்து கலந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தருமபுரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் பாலக்கோட்டில் ஒருவரும், மற்ற இடங்களில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மொத்தம் 270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.