காட்டு பகுதி வழியாக சென்ற விவசாயியை தாக்கிய கரடி
- மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் விவசாயி.
- வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கால்பாச்சேரி, மேல்பா ச்சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளி ட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. மேலும் இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீபகலமா காட்டு பகுதி வழியாக வரும் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கி படுகாயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பவதன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த கரடி ஒன்று இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே வந்து கோவிந்தசாமியை தாக்கியது.
கால்களில் கடித்ததால் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டதில் கரடி ஊனத்தூர் வனப்பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் நாங்கள் நீண்ட காலமாக காட்டு பகுதி வழியாக செல்கிறோம். அப்போது செல்லும்போது வனவிலங்குகள் எங்களை தாக்கி படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.