விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
- போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள அயன்விருசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள எல்லம்மாள் தேவி, கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாபெரும் பந்தயத்தை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி கருப்பசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி கருப்பசாமி, கிளை செயலாளர் ராமசாமி உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.