உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்கு

Published On 2023-09-17 07:25 GMT   |   Update On 2023-09-17 07:25 GMT
  • கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது விருகாவூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷ் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எஸ்.ஒகையூர் கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சில நிலங்களில் பயிறு இருந்ததால் அந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

இதனால் தங்கள் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல் அனைத்து நிலத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜா, கொடியரசு, பிச்சப்பிள்ளை, பொன்னுசாமி உள்ளிட்ட 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மற்றும் சிலர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எஸ்.ஒகையூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 17 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News