உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அருகே ரூ.23 ஆயிரம் மோசடி செய்த தபால்காரர் மீது வழக்கு

Published On 2023-09-27 09:16 GMT   |   Update On 2023-09-27 09:16 GMT
  • முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர்.
  • உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50) விவசாயி. இவர் தன் மனைவி சாரதா பெயரில் தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் கட்டி உள்ளார். இது 6.7.2018 அன்று முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர். இதை தெரிந்து தெரிந்து கொண்ட சிறுதலைப் பூண்டி தபால்காரர் விஜயன், அதை அபகரிக்க நினைத்து சென்னைக்கு சென்றிருந்த தேவராஜை போன் மூலம் தொடர்பு கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் கியாஸ் வந்துள்ளதால் உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.

இதை நம்பிய தேவராஜ் தன் மனைவி சாரதா மூலம் அனைத்தையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.பின்பு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 23 ஆயிரத்து 645 ரூபாயையும் விஜயன் எடுத்துவிட்டார். இது குறித்து தேவராஜ் பலமுறை கேட்டும் விஜயன் தரமறுத்திருக்கிறார். இதுகுறித்து தேவராஜ் வளத்தி போலீஸ் நிலையத்தில் தபால்காரர் விஜயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News