உள்ளூர் செய்திகள்

ராட்சத பலூன்களை கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பறக்கவிட்டனர்.

தரங்கம்பாடியில், ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராட்சத பலூனை பறக்கவிட்ட கலெக்டர்

Published On 2023-04-18 07:49 GMT   |   Update On 2023-04-18 07:49 GMT
  • கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • தூய்மை பணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொ ள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சா ர்பில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News