உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி மலைப்பாதையில் நடுரோட்டில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது

Published On 2023-07-17 09:21 GMT   |   Update On 2023-07-17 09:21 GMT
  • மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது.
  • ராட்சத மரம் விழுந்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அரவேணு,

நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை என 2 சாலைகள் செல்கின்றன.

இந்த சாலைகளில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மாவட்டத்திற்கு செல்லும் போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையும், மலையில் இருந்து கீழே இறங்கும் போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையையும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையும் வழக்கம்போல கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அதிகாலை 5 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் திடீரென முறிந்து சாலை யின் நடுவே விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. மரம் முறிந்து விழுந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் வாகனங்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் வாகனங்கள் நகரமுடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி பழங்குடியின மக்கள் தாங்களாகவே முன்வந்து, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு வாகன ஓட்டிகளும் உதவினர். இதை யடுத்து பழங்குடியின மக்க ளும், வாகன ஓட்டிகளும் சேர்ந்து மரத்தை அகற்றி சாலையின் ஒருபுறம் வழியாக வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர்.

2 மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து சென்று கொண்டிருக்கி ன்றன. இருந்த போதிலும் மரம் முற்றிலும் அகற்ற ப்படா தால் சிரமத்து டனேயே பயணித்து வருகி ன்றனர். எனவே தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினர் விரைந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News