உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த கணவன், மனைவி- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published On 2024-07-08 08:30 GMT   |   Update On 2024-07-08 08:34 GMT
  • விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது.
  • கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு கணவன், மனைவி என 2 பேர் வந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இவர்களிடம் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் அருகில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், அதில் உள்ள விஷ பூச்சிகள் கூரை வீட்டிற்குள் வருகிறது. இதனால் 2 மகள்களும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இங்கு புதிய வீடு கட்ட மானியம் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முடிவு செய்ததாக போலீசாரிடம் அன்பழகன் கூறினார்.

இதையடுத்து தங்களின் பிரச்சனைகளுக்கு மனு அளித்துதான் தீர்வு காணவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News