உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்.

பேராவூரணியில், மினி மாரத்தான் போட்டி

Published On 2023-01-23 08:26 GMT   |   Update On 2023-01-23 08:26 GMT
  • ஆண்களுக்கு 7 கி.மீ. தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ழ பவுண்டேஷன் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டி தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கி கொன்றைக்காடு ரெயில்வே கேட் வரை 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. போட்டியானது ஆண்கள், பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.

சிறுவர்களுக்கு 3 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் மற்றும் ஆண்களுக்கு 7 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ. மற்றும் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ., கல்வியாளர் ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் காதல் கோட்டை அகத்தியன் உள்பட 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ழ பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ழ பவுண்டேஷன் நிறுவனர் கார்க்கி அசோக்குமார் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.

இதில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம், மணமேல்குடி ஒன்றிய தலைவர் பரணி கார்த்திகேயன், மருத்துவர்கள் நீலகண்டன், சந்திரசேகரன், சவுந்தரராஜன், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News