உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத் மற்றும் ஊர் பொதுமக்கள் மனு கொடுத்த போது எடுத்த படம்.

ஆழ்வார்திருநகரியில் புதிய பாலம் கட்ட வேண்டும்- அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு

Published On 2022-12-27 09:31 GMT   |   Update On 2022-12-27 09:31 GMT
  • ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
  • பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தாமிரபரணி ஆற்று பாசனத்தை சார்ந்த விவசாயத்தையே வாழ்வா தாரமாக கொண்ட விவசாய பூமி ஆகும்.

ஸ்ரீவைகுண்டம் தென் கால் பாசனவசதி மூலம் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் விவ சாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல் மற்றும் வாழை பயிரிட்டு வருகின்றனர்.

விவசாயத்திற்கு தென் கால் பாசனம் இரண்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்த 2 வாய்க்காலில், ஒரு வாய்க்கால் கடம்பா குளத்திற்கும், ஒரு வாய்க்கால் ஆத்தூர் குளத்தி ற்கும் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.

இந்த வாய்க்காலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக பாலம் போடப்பட்டு அந்த பாலத்தின் வழியாக ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டுக்கு உட்பட்ட அழகிய மணவாளபுரம், முஸ்லிம் தெரு, பத்தவாசல், பிள்ளமடை, வேலவன் தெருவை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஊருக்கு சென்று வந்தனர்.

அதுமட்டுமின்றி ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தபாலம் ஒரு வழி பாதை போன்ற பால மாக இருப்பதால் கனரக வாகனங்கள், நெல் அறுவடை எந்திரம், மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. மேலும் அவசரமான சூழ்நிலை நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பாலம் பழுதடைந்த நிலை யில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி தான் ஆழ்வார் திருநகரிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஆழ்வார்திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், செம்பூர் நயினார் ஆழ்வை போஸ், 10-வது வார்டு செயலாளர் மந்திர மூர்த்தி, 15-வது வார்டு செயலாளர் ரமேஷ், சங்கர், சின்னத்துரை, ஆபிரகாம், பாண்டி, குருசாமி, ரஸ்வி ஆகியோர் மீன் வளம் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பாலத்தை அகலப்ப டுத்தி புதிய பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய பாலம் கட்ட ஆவனம் செய்வதாகவும் கூறினார்.

Tags:    

Similar News