காரைக்காலில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கேபிள் திருடியவர் கைது
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு பத்தக்குடி கீழத்தெருவைச்சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், தனியார் செல்போன் டவர் கெம்பெனியில் எலக்ட்ரிக்கல் டெக்னிசி யனாக பணிபுரிந்து வரு கிறார். சம்பவத்தன்று காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள செல்போன் டவரில் சில வேலைகளை நண்பர் குருநாதன் என்பவரோடு செய்து கொண்டிருந்தார். அப்போது 5ஜீஅலை கற்றைக்கான காப்பர் கேபிள் அறுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடந்தார். அந்த கேபிளை யாரோ மர்ம நபர்கள் அறுத்து திருடி சென்றதை அவர் உறுதி செய்தார். அதன் மதிப்பு சுமார் ரூ.16 ஆயிரம் இருக்கும்.
இது குறித்து, நெடுஞ்செ ழியன் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நெடுஞ்செழியன் காரைக் கால் பஸ் நிலையம் அருகே நண்பரோடு நடந்து சென்ற போது, சந்தேகத்திற்கு இடமாக மூட்டை ஒன்றோடு சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அப்போது, மூட்டையில், திருடப்பட்ட செல்போன் டவர் கேபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நண்பர்க ளோடு சேர்ந்த மர்ம நபரை பிடித்து, காரைக் கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில், மயிலாடு துறை மாவட்டம் தரங்கம் பாடி மடப்புரம் காந்தி ரோட்டைச்சேர்ந்த மூர்த்தி (வயது32) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து, செல்போன் டவர் கேபிளை பறிமுதல் செய்தனர். இவர், ஏற்கெனவே, காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள அதே தனியார் செல்போன் டவரில் பேட்ரிகளை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது குறிபிடத்தக்கது.