மக்களைத் தேடி மனுக்கள் ெறும் முகாம்அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும்அமைச்சர் எ.வ. வேலு உறுதி
- ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.
மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.