உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டு தர கோரி மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிகாரியிடம் கண்ணீர் மல்க மனு அளித்த காட்சி. உடன் வந்த மகள் அதிர்ச்சியில் திடீர் மயக்கம்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டு தர கோரி மனைவி கலெக்டரிடம் மனு

Published On 2023-06-12 06:57 GMT   |   Update On 2023-06-12 06:57 GMT
  • இந்திரா இவரது 2 மகள்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
  • மகாதேவன் உடலை கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை ) மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். இந்த நிலையில் புவனகிரி வட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த இந்திரா (வயது 48). இவரது 2 மகள்கள், உறவி னர்கள் மற்றும் மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் நிர்வாகி செந்தாமரை செல்வம் ஆகியோர் நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (56). சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மகா தேவன் உடன் பணி புரிந்து வந்த நபர்கள் தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்ட இந்திரா அதிர்ச்சி அடைந்தார். மேலும் எனது கணவர் மகாதேவன் உடலை சவுதி அரேபியாவில் இருந்து எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் இறந்த நிலை யில் எங்களது குடும்பத் திற்கு அரசு உதவிகள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் மனு அளிக்க கலெக்டர் அலுவல கத்தில் இருந்த இறந்த மகாதேவன் மகள் மதுமிதா என்பவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததால் திடீரென்று மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் அடைந்த மது மிதாவை அங்கு இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க இறந்த மகாதேவன் உடலை மீட்டு தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதன் காரண மாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News