- மின் கம்பிகள் புளிய மரத்தின் கிளையில் ஊடுருவி செல்கிறது.
- எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 3-வது வார்டு குட்டைக்கரை பகுதியில் புளிய மரத்தில் ஊடுருவி பழுதடைந்து காணப்படும் மின்கம்பியை ஆபத்து ஏற்படும் முன் பென்னாகரம் மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குட்டைக்கரை பகுதிகளில் மின் கம்பம் வழியாக செல்லும் மின் கம்பிகள் புளிய மரங்களில் ஒட்டி உராய்ந்தும்,ஒரு இடத்தில் புளிய மரத்தின் கிளையில் ஊடுருவியும் செல்கிறது.
புளிய மரங்களில் உராய்ந்து செல்லும் மின் கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த புளிய மரத்தின் கீழ் பகுதியில் மினி டேங்க் உள்ளதால், ஏராளமான பெண்கள் குழந்தைகள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புளிய மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்தாலோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்தாலோ எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பெண்ணாகரம் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.