உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் முகாமினை மாவட்ட கலெக்டர் மோகன், லட்சுமணன்எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தனர்.

விழுப்புரத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் முகாம்

Published On 2022-07-09 07:41 GMT   |   Update On 2022-07-09 07:41 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.
  • பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் தூய்மையான நகரமாக வைத்துக் கொள்வது என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

விழுப்புரம்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கரு ணாநிதி பிறந்த நாளை யொட்டி முன்னிட்டு தமிழகம் முழுவதும் தூய்மை இயக்க த்திற்கான பணியினை முதல்-அமைச்சர் தொடங்கி வை த்தார். இந்நிலையில் அன்று விழுப்புரம் மாவ ட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொ ன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாதத்தின் 2-வது சனிக்கி ழமை மற்றும் 4-வது சனிக்கி ழமை அன்று விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி என் நகரம் என் பெருமை என் குப்பை என் பொறுப்பு" என்ற தாரமந்திரத்திற்க்கு ஏற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.

இன்று மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வா ரும் முகாம் மற்றும் நகர த்தை தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் தலை மையில், விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் லட்சு மணன், நகர மன்ற தலைவர் தமிழச்செல்வி ஆகியோர் விழுப்புரம் 2-வது வார்டில் வட க்குத் தெரு பகுதியில் துவக்கி வைத்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் தூய்மை யான நகரமாக வைத்துக் கொள்வது என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன மேலும் விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் கோலியனூரான் வாய்க்காலில் மழைநீர் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கமலகண்ணப்பன் நகரிலும் இப்பணி நடைபெற்றது. மேலும் 29வது வார்டில் மகாபாராத தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மாபெரும் துப்புரவு பணிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆணையர் சுரேந்திர ஷா, வருவாய் அலுவலர் நந்த கோபால், தாசில்தார் ஆன ந்தகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பத்மாவதி, புல்லட் மணி, அன்சர்அலி, வருவாய் ஆய்வாளர் ஏழுமலை,நகர தி.மு.க. செயலாளர் சக்கரை, துப்புரவு ஆய்வாளர் ரமணன், துப்புரவு மேற்பா ர்வையாளர் கார்த்தி, முன்னாள் கவுன்சி லர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News