உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் வானத்தில் தோன்றிய அபூர்வ நிகழ்வு

Published On 2024-09-30 06:47 GMT   |   Update On 2024-09-30 06:47 GMT
  • பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
  • வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது.

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இதுஒரு உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு மட்டும் தான் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

ஆனால் இந்த அபூர்வ நிகழ்வை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்திருந்தனர்.

இந்தநிலையில் மாலை கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு இருந்தனர். மாலை சரியாக 6.20 மணிக்கு சூரியன் மறைந்தது. சூரியன் மறையும்போது வானத்தில் அபூர்வ நிகழ்வு தோன்றியது.

வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது. அதற்கிடையே சூரியன் மறையும்போது அதனுடைய பிரதிபலிப்பு வானத்தில் அபூர்வமாக காட்சியளித்தது.

செம்பழுப்பு நிறத்தில் தீப்பிழம்பு போல் வானத்தில் அந்த அபூர்வ நிகழ்வு தோன்றியது. இந்த அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News