உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

புகையில்லா போகிப் பண்டிகைகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-01-10 08:24 GMT   |   Update On 2023-01-10 08:24 GMT
  • புகை யில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது.
  • சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புகை யில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்தது. மகாதேவ வித்யா லயா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி யின் உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன் பேசியதாவது:-

காற்றை மாசுபடுத்தும் வகையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து புகையை உண்டாக்குவதால் பொது மக்கள் மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது . எனவே இதனை களைய புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதை பெரிய வர்களுக்கு அறிவுறுத்த இளைய சமூகத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பள்ளி மாணவ- மாணவிகளான உங்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கி கூறியுள்ளோம். இதனை உங்கள் பெற்றோர், உங்களுக்கு தெரிந்த அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக் கூறி புகையில்லா போகி கொண்டாடவும் நகராட்சி பணியாளர்களிடம் தேவையற்ற பொருட்களை ஒப்படைக்கவும் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ- மாணவிகளை நகராட்சி ஆணையாளர் பாராட்டி வாழ்த்தினார்.

முடிவில் மாணவ- மாணவிகள் புகையில்லா போகி கொண்டாடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News