கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக சிறப்பு திருப்பலி
- நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது.
- குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பூசினர்.
பூதலூர்:
தஞ்சை அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதியிலிருந்து நீதிக்கும், அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது. இறை உதவியை இறைவனின் அன்பை ஜெபத்தின் மூலம் பெற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நாளாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.
பூண்டி மாதா பேராலயத்தில் இன்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி பேரலாய அதிபர் சாம்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாத்து வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பக்தர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர். திருப்பலியின் போது பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.