பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி
- புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது.
- கல்லறைகள் தூய்மை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபட்டனர்.
பூதலூர்:
கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையர்களின் நினைவு கூறப்படும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்–பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களைநினைத்து வழிபடுவார்கள்.
கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளில் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது. திருப்பலியில் பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மீக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்கள்.
திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் பேராலயத்தின் உள்ளே அமைந்துள்ள லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லூர்து சேவியர் கல்ல–றையை பேராலய அதிபர் சாம்சன்புனிதம் செய்து வழிபட்டார்.
அதனை தொடர்ந்து புள்ளி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறை புனிதம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூண்டி பேராலய இணைந்து உள்ள கிராமங்களில் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள்புனிதம் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்து வெடிவெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.