உள்ளூர் செய்திகள்

பதக்கங்களுடன் மாணவி அஜிஷா.

சர்வதேச வில்வித்தை போட்டியில் விளையாட பொருளாதார வசதி இன்றி தவிக்கும் மாணவி

Published On 2023-10-25 09:50 GMT   |   Update On 2023-10-25 10:10 GMT
  • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
  • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

இவரது மனைவி செம்மலர்.

இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News