சங்ககிரியில் விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை
- கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.