உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மொத்தம் 3,225 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-31 09:09 GMT   |   Update On 2023-08-31 09:09 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி
  • வீடியோ கால் செய்து தேவையான ஆர்டர் பெறுவதால் வருமானம் அதிகரிப்பு

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் கடந்த 07.05.2021 முதல் 24.08.2023 வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,676 பயனாளிகளுக்கு ரூ9.38 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 990 பயனாளிகளுக்கு ரூ.5.54 கோடி மதிப்பிலும், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பு உள்பட மொத்தம் 3,225 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி ராஜேஸ்பகதூர் கூறிய தாவது:-

நான் நீடில் இண்டர்டீரிஸ்சில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 6 மாதத்திற்கு முன் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த மாதம் நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட எனக்கு கலெக்டரால், ரூ.99,999 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இதனால் நான் தினந்தோ றும் பணியிடத்திற்கும் வீட்டிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல மிகவும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக இருக்கிறது. இதற்கு முதல்- அமைச்சருக்கு நன்றி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திறன்பேசி பெற்று பயனடைந்த மாற்று த்திறனாளி பயனாளி ராணி கூறும்போது, நான் ஊட்ட வண்டிச்சோலை பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டுகளாக திறன்பேசி வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.

என்னை நேர்காணலுக்கு அழைத்து அதில் என்னை தேர்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கலெக் டரால் ரூ.13,950 மதிப்பில் திறன்பேசி வழங்கப்பட்டது. இதன் மூலம் வீடியோ கால் செய்து, தையல் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெற்று தையல் தொழில் செய்து வருவதால், எனது வருமானம் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த வருமானம் எனது குடும்பத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. இது போன்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News