உள்ளூர் செய்திகள்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி. 

திட்டக்குடி அருகே வேன் கவிழ்ந்தது.: ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 19 பேர் காயம்

Published On 2023-01-01 07:05 GMT   |   Update On 2023-01-01 07:05 GMT
  • சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து ஒரு வேனில் சென்றனர். நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை வதிஷ்டபுறம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 குழந்தை கள் உட்பட 19 பேரும் வேனில்சிக்கினர். சாலையில் சென்றவர்களும் அருகில் இருந்த வர்களும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி (40), ஐஸ்வர்யா (16) காயத்ரி (24) முத்து (45), வீரம்மாள் (40), மகேஸ்வரி (28), சரிதா (32), பரமேஸ்வரி (22) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயந்தி, காயத்ரி, வீரம்மாள், மகேஸ்வரி, சரிதா உட்பட 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதி கிராமத் தைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமா னோர் மருத்துவ மனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News