சங்கரன்கோவிலில் குளக்கரையில் சண்டையிட்ட பாம்புகளால் பரபரப்பு
- நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன.
- பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இதனால் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் அருகில் சிறிய குளம் ஒன்று காணப்படுகிறது.மழை காரணமாக அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் இந்த குளத்தின் கரையோரத்தில் நேற்று மாலை பெரிய நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியின் அருகிலேயே பள்ளி கூடம் ஒன்றும், கோவிலும் உள்ளது. அந்த வழியாக சென்ற சிலர் பாம்பு சண்டையை செல்போனில் வீடியோப் பதிவு செய்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த பாம்புகள் கரையில் இருந்து குளத்துக்குள் சென்றுவிட்டது.
இந்நிலையில் பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.