உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

விழுப்புரத்தில் இன்று பரபரப்புமக்கள் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண்.

Published On 2023-02-11 09:29 GMT   |   Update On 2023-02-11 09:29 GMT
  • இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.
  • அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிம ன்றத்தில் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணை குழு சார்பில் இன்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 3,336 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இவற்றில் இன்று காலை 9 மணி வரை 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ. 5 கோடியே 55 லட்சத்து 51 ஆயிரம் வழங்கப்பட்டது.இந்த மக்கள் நீதிம ன்றத்துக்கு விக்கிர வாண்டி அருகே உள்ள பாப்பன ம்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி வந்திருந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.

இதற்கு தீர்வு காண்பதற்கு முத்துலட்சுமி வந்தார். இந்த வழக்கினை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி பூர்ணிமா விசாரித்து கொண்டிருந்தார்அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப ட்டது. உடனே முத்து லட்சுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.

Tags:    

Similar News