உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் காட்டு எருமைக்கு குடிநீர் வைத்த பெண்

Published On 2023-10-06 08:43 GMT   |   Update On 2023-10-06 08:43 GMT
  • சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்
  • வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கரடி, காட்டு எருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து, அங்கு உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுஎருமை, நேற்று கோத்தகிரி குடியிருப்பு பகுதி அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வசிக்கும் ஒரு பெண், அகன்ற பாத்திரத்தில் குடிநீர் வைத்து தாகம் தணித்து உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆபத்து நிறைந்த வன விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவளித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் தொடர்கதயாகி விட்டது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News