உள்ளூர் செய்திகள்

பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி மாத திருக்கல்யாண உற்சவம்

Published On 2023-08-07 09:58 GMT   |   Update On 2023-08-07 09:58 GMT
  • ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
  • அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து நடனமாடினர்.

வேப்பனப்பள்ளி.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரகுப்பம் கிராமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

காலை முதலே வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு வெண்ணை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்கள் முன்னிலையில் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆனந்த நடனமாடி ஆரோகரா கோஷத்துடன் முருகன் வள்ளி தெய்வாணை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அப்போது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி வந்து நடனமாடினர்.இந்த திருகல்யாணத்தில் கடவரப்பள்ளி காரக்குப்பம், நாச்சிகுப்பம், திம்மசந்திரம், பண்ணப்பள்ளி யானைக்கால் தொட்டி, ஜேடுகொத்தூர், கத்திரிப்பள்ளி வேப்பனப்பள்ளி, பூதிமுட்லு நாடு வனப்பள்ளி, தோட்டக்கணவாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

Similar News