உள்ளூர் செய்திகள் (District)

குழந்தைகள்- பெண்கள் விடுதிகள் பதிவின்றி செயல்பட்டால் நடவடிக்கை

Published On 2022-07-29 08:52 GMT   |   Update On 2022-07-29 08:52 GMT
  • குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம்- 2014 -ன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துப வா்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
  • விடுதிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே 24 மணிநேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்து பவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடை பெற்றது. இதில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:-

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம்- 2014 -ன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துப வா்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

இல்லம் அல்லது விடுதியின் உரிமையாளா் தங்கள் இல்லத்தில் உள்ள பணியாளா்களின் கல்வித் தகுதி, விடுதியை நடத்தும் சங்கம் அல்லது அறக்கட்டளையின் பதிவுச் சான்றிதழ், புதுப்பித்தல் சான்றிதழ், சங்க விதி முறைகள், நிா்வாகக் குழுவினரின் விவரங்கள், கட்டடத்தின் வரைபடம், கட்டடத்தின் உறுதிச் சான்றி தழ், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட கட்டடத்தின் உரிமம், தீயணைப்புத் துறையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வசிப்பிட தகுதிச் சான்றிதழ், உணவுப் பாதுகாப்பு சான்றிதழ், வருடாந்திர அறிக்கைகள், விடுதியில் தினசரி வழங்கும் உணவுப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட கலெக்டருக்கு படிவம் 4-ல் மனு செய்தல் வேண்டும். தாங்கள் நடத்தும் விடுதி அல்லது இல்லங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். விடுதிகளில் ஆண், பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே 24 மணிநேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

55 வயதுக்கு மேற்பட்ட ராணுவத்தினா், ஓய்வு பெற்ற போலீசாரை பாதுகாவலராக நியமிக்கலாம். பெண்கள் விடுதியில் பெண்கள் மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க் வேண்டும். பாா்வையாளா் பதிவேடு, விடுதியின் மேலாளா் விவரங்கள், குழந்தை அல்லது பெண்களின் பெற்றோா் விவரங்கள், பாதுகாவலா் விவரம் மற்றும் அவருக்கான அடையாள அட்டை விவரங்க ளை வைத்திருக்க வேண்டும். உரிமம் தவறிய விடுதி உரிமை யாளருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 50,000 அபரா தம் விதிக்கப்படும். சட்டத்தி ற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News