உள்ளூர் செய்திகள்

மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் சேர்மன் தயாளன் தலைமையில் நடைபெற்றது.

மரக்காணத்தில் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-04-18 05:29 GMT   |   Update On 2023-04-18 06:32 GMT
  • மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்திற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம்:

மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பழனி முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, திருவேங்கடம், கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு சேர்மன் தயாளன் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றப்படும் என்று பதிலளித்தார்.  இதனைத் தொடர்ந்து மரக்காணம் ஒன்றியம் பிரம்மதேசம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சிலர் அரசு அனுமதி பெறாமல் கல் குவாரிகள் நடத்தி வருகின்றனர். அவ்வாறு அனுமதி பெறாமல் நடத்தப்படும் கல் குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்காணம் அருகே செட்டி குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இறால் குஞ்சு பொறிப்பு தொழிற்சாலைகளுக்கு சட்ட விரோதமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுகின்றனர். இவ்வாறு உறிஞ்சிவதால் தற்பொழுது கோடை காலம் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே சட்ட விரோதமாக ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீரை உறிஞ்சும் தனியார் இறால் குஞ்சு பொறிப்பு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News