ராதாபுரம் யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி - அமைச்சரிடம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மனு
- நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
- முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது .எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
அதில், ''ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது.
எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்ய ப்பன், கனகராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.