இந்திய கம்யூனிஸ்ட் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
- கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
- இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
சுடுகாட்டு சாலையை உரியவர்களிடம் பேசி இடத்தை பெற்று அளந்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வலங்கைமானில் மண்டல வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முதல் நிலைக் காவலர் கல்யாணசுந்தரம், ஆலங்குடி ரெவின்யு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் நவீன், பாலசுப்ரமணியம் தாலுக்கா ஆபீஸ் அலுவலர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு ராஜா , ரங்கராஜன், மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.