திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை
- விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும்.
- தேசிய மாணவர் படை ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு.
திருப்பூர் :
தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் - 30, ஆங்கிலம் இலக்கியம் - 50, பொருளியல் - 30, வரலாறு - 50, பி.காம்., 100, பி.காம்.சி.ஏ., 60, பி.காம்., சர்வதேச வணிகம் - 50, பி.பி.ஏ., - 50, பி.சி.ஏ., - 50, பி.எஸ்சி கணினி அறிவியல் (ஷிப்ட் 1) - 60, பி.எஸ்சி., கணினி அறிவியல் (ஷிப்ட் 2) - 60, பி.எஸ்சி., இயற்பியல் - 24, வேதியியல் -48, கணிதம் - 75, விலங்கியல் - 48, ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் - 50 ஆகிய இளநிலை பட்டபடிப்புகள் வழங்கப்படுகின்றனர்.
இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in மற்றும், www.tngasa.org என்றஅங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் இன்று முதல் ஜூலை15 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-
இணையதளத்தில் கேட்கப்படும் சுய விவரங்கள், தேர்வு செய்யப்போகும் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரி எனில் கூடுதல் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், www.cgac.in இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.