உள்ளூர் செய்திகள்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி. 

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் -கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2023-07-11 09:06 GMT   |   Update On 2023-07-11 09:06 GMT
  • ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது.
  • மக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

செங்கோட்டை:

அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பது குறித்து செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை மற்றும் மதுரையில் நடை பெற உள்ள மாநாட்டுக்கு நிர்வாகிகள், உறுப்பினா்களை அழைத்து செல்வ தற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதிய உறுப்பினா்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் பணி செய்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது நமது இலக்காக உள்ளது. இதுவரையில் புதிய உறுப்பினா்களை சேர்த்த நிர்வாகிகள் மேலும் கூடுதலாக உறுப்பினா்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினராக சேர்க்க வேண்டும். இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். அதேபோல் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மதுரை மாநகரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பி னா்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு நமது உறுப்பினா்களின் குடும்ப விழா வாக எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டியன், மகாராஜன், செல்லப்பன், ஜெயகுமார், துரை பாண்டி யன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், வாசுதேவன், ராமசந்திரன், நகர செயலா ளர்கள் முருகன், ஆறுமுகம், பரமேஸ்வரபாண்டியன், கணேசன், பேரூர் செயலா ளர்கள் டாக்டர் சுசீகரன் சேவகபாண்டியன், கார்த்திக் ரவி, நல்லமுத்து, அலியார், முத்துகுட்டி, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், தொழிற்சங்க, சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பி னா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News