உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்

Published On 2023-03-07 10:12 GMT   |   Update On 2023-03-07 10:12 GMT
  • இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
  • மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவின் 75-வது நாள் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-. நீர்தேர்வு ரத்து, மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்றார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர்கள் அமரநாதன், சொக்கலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News