விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்
- நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
- 9 லட்சம் மதிப்புள்ள விவசாய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.
காரிமங்கலம்,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் வேளாண்மை இயந்திரமாக்கும் உப இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சந்திரா வரவேற்றார். காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுக்கு பவர் டில்லர், பவர் பீடர் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 13 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள விவசாய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை பொறியியல் துறை பணி யாளர்கள் பங்கேற்றனர்.