வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
- உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
- முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் வேளாண் வணிக துறையின் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணை சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நெப்டிம் மூலமாக இரண்டு நாள் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா பயிற்சி தஞ்சாவூர் தேசிய உணவு கழக உணவு பதன தொழில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவகாமி, தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ஹேமா, தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்குமார், உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இப்பயிற்சியில் நெல், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள்,சிறுதானிய பயிர்கள், வாழை, இதர தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் சிப்பமிடுதல், பிராண்டிங் மற்றும் வணிக தொடர்புகள் ஏற்படுத்தி கொடுத்தல் ஆகியவை இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
இதில் இலால்குடி உதவி வேளாண் அலுவலர் சிவசக்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உழவர் ஆர்வலர் குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.