ஆழ்வார்குறிச்சி பகுதியில் நெல் பயிரை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
- ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
- நெல் பயிரை காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம்.
ஆழ்வார்குறிச்சி:
கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள கார் நெல் பயிரை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளா ண்மை உதவி அலுவலர்கள் அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி-2 (செங்கானூர் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை) சாகுபடி செய்திருந்த ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நோய் தாக்குதலால் நெல் பயிர் அங்காங்கே காய்ந்து வைக்கோலாக மாறி வருகிறது. இதிலிருந்து நெல்பயிரை பாதுகாக்க புப்ரோபுசின் -300 மில்லி (அல்லது) தையோ மெத்தாக்ஸைம்-100 கிராமுக்கு டிரைசைக்குளோஜோல்-120 கிராம் ஒரு ஏக்கர் என்ற விகிதா சாரத்தில் கலந்து மருந்தை தெளித்து கட்டுப்ப டுத்தலாம். மேலும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்தல் மற்றும் நெல் பயிரை அங்காங்கே விலக்கி விட்டு காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தெரிவித்தார். ஆய்வின் போது விவசாயிகள் சண்முகநாதன், மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.