திண்டிவனத்தில் பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்: ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
- மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
- 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப் பட்டது.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டிவனம் நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளை ச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், திண்டிவனம் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர், போக்குவரத்து கழக உதவி பொறியாளர்நேற்று திண்டிவனம் பஸ் நிலையம் ,திண்டிவனம்- மரக்காணம் சாலை மற்றும் செஞ்சி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா்.
இதில் 5தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், கண்கள் கூசும் அளவுக்குஅதிக ஒளியுடன் திகைப்பூட்டும் விளக்குகள் பொருத்தப் பட்ட 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது. 16 வாகனங்களை சோதனை செய்து அறிவிக்கை செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றிவந்த சரக்கு வாகனத்ைத நிறுத்தி சோதனை செய்தனர்.ஒரு வாகனத்திற்கு ரூ5 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது.