உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

திருநங்கைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும் -குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2023-11-04 06:32 GMT   |   Update On 2023-11-04 06:32 GMT
  • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில் 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, பரிசீலனை க்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத நபர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் , திருத்தம் தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும் திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News