உள்ளூர் செய்திகள்

காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள அகத்தியர் உள்ளிட்ட சிலைகளை படத்தில் காணலாம்.




தென்காசி அரசு விழாவில் மக்களை கவர்ந்த அரங்குகள்: காய்கறிகளால் அமைக்கப்பட்ட அகத்தியர் சிலை

Published On 2022-12-08 09:38 GMT   |   Update On 2022-12-08 09:38 GMT
  • தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் விழா நடைபெற்ற மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அதன் அருகில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை பார்வையிட்டார்.
  • காய்கறிகள், பழங்கள், மலை பயிர்கள் உள்ளிட்டவற்றால் அகத்திய முனிவர், ஏர் கலப்பையுடன் விவசாயி நிற்கும் உருவம், பெண் தொழிலாளி தலையில் பெட்டியை வைத்து காய்கறி சுமந்து வரும் உருவம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் விழா நடைபெற்ற மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அதன் அருகில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை பார்வையிட்டார்.

அங்கு காய்கறிகள், பழங்கள், மலை பயிர்கள் உள்ளிட்டவற்றால் அகத்திய முனிவர், ஏர் கலப்பையுடன் விவசாயி நிற்கும் உருவம், பெண் தொழிலாளி தலையில் பெட்டியை வைத்து காய்கறி சுமந்து வரும் உருவம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மலை பயிர்களான மிளகு உள்ளிட்டவையும் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் அந்த அரங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

மற்றொரு அரங்கில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பாய், தேன், கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார். இந்த அரங்குகள் பொதுமக்களை கவர்ந்தன.

Tags:    

Similar News